அமைச்சர் லாம்: மருத்துவமனைகளையும் தாண்டி மறுவாழ்வு பராமரிப்பு தேவை

அமைச்சர் லாம்: மருத்துவமனைகளையும் தாண்டி மறுவாழ்வு பராமரிப்பு தேவை

1 mins read

மறுவாழ்வுக்கான சுகாதாரப் பராமரிப்பு மருத்துவமனைகளையும் கடந்து சமூகத்தில் நடைபெற மேலும் பல முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார். சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் நேற்று நடைபெற்ற 5வது மறுவாழ்வு மாநாட்டில் பேசிய டாக்டர் லாம், சிங்கப்பூரின் மூப்படைந்து வரும் சமூக சூழலால் மறுவாழ்வு பராமரிப்பு சிகிச்சைக்கான தேவை வேகமாக அதிகரிக்கும் என தாம் நம்பு வதாகக் குறிப்பிட்டார். "வரும் 2030ஆம் ஆண்டுக் குள் நான்கில் ஒரு சிங்கப்பூரருக்கு வயது 65க்கும் மேலாக இருக்கும். அது தற்போதைய எண்ணிக் கையைவிட இரு மடங்கு அதிகம். "அதிகமான நோயாளிகள், குறிப்பாக பலதரப்பட்ட நாட்பட்ட நோய்கள் உடைய முதியவர் களுக்குப் பல நிலைகளில் பரா மரிப்பு தேவைப்படும்," என்றும் அவர் சொன்னார். "நமது அரசு மருத்துவமனை, பலதரப்பட்ட மறுவாழ்வு சிகிச் சைகளை வழங்குகின்றன. "இருப்பினும் நோயாளிகள் தங்களுக்கு பழக்கமுள்ள சூழலில் மறுவாழ்வு சிகிச்சை பெற முயற்சிகள் எடுக்க வேண்டும்," என்றார் அவர். நோயாளிகளின் சிகிச்சையை சமூகத்துடன் ஒன்றிணைக்க சிங்கப்பூர் பல வழிகளில் செயல் பட்டு வருகிறது என்று அமைச்சர் சுட்டினார். ஆரம்பகாலத்திலேயே மறு வாழ்வு சிகிச்சைக்கான தேவை யைக் கண்டறிந்து வழங்குவது. நோயாளிகள், குறிப்பாக முதியவர்கள் தங்களின் உடல் நிலை மேலும் மோசமடைவதையும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழலையும் வெகுவாகக் குறைக்கிறது என்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் சொன்னார்.