என்டியுசி 'மேட் இன் சிங்கப்பூர்' காட்சியில் ஐம்பது தயாரிப்புகள்

என்டியுசி 'மேட் இன் சிங்கப்பூர்' காட்சியில் ஐம்பது தயாரிப்புகள்

1 mins read

சிங்கப்பூர் முழுவதும் பேரங்காடி களை நடத்திவரும் ஃபேர்பிரைஸ் நிறுவனம், இம்முறை ஐம்ப துக்கும் மேற்பட்ட உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்து கிறது. ஆறாவது ஆண்டாக நடை பெறும் அதன் 'மேட் இன் சிங்கப்பூர்' காட்சியில் அனைத்து உள்ளூர் தயாரிப்புகளும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் படும். ஜூரோங் ஈஸ்ட் 'ஜெம்'மில் உள்ள 'ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா' பேரங்காடியில் 'மேட் இன் சிங்கப்பூர்' காட்சி நேற்று அதி காரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இதையொட்டி தீவு முழுவதும் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடி களில் செப்டம்பர் 20ஆம் தேதி வரை இந்தக் காட்சி இடம்பெறும். மைக்ரோவேவில் சில நிமிடங் களில் சுட வைத்துச் சாப்பிடும் ஆரோக்கியமான 'பிஸ்ஸா' முதல் 'கறி சிக்கன் ரைஸ்' வரையிலான உடனடி உணவு களும் உள்ளூர் தயாரிப்புகளில் அடங்கும்.