மாற்றியமைக்கப்பட்ட அதிபர் தேர்தல் முறை முக்கியமானது

மாற்றியமைக்கப்பட்ட அதிபர் தேர்தல் முறை முக்கியமானது

1 mins read

சிங்கப்பூரில் பல இன பிரதி நிதித் துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் வாக்களித்து தேர்ந் தெடுக்கும் அதிபர் தேர்தல் முறையில் அண்மையில் செய்யப் பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய மானவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரி வித்துள்ளார். அதிபர் பணி என்பது நாட்டி னரை ஐக்கியப்படுத்தும் சின்னம் என்பதே இதற்கான காரணம் என்றார் அவர். சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பிட்ட அதிபர் தேர்தலை ஒதுக்கி வைக்க வகை செய்யும் திருத்தங்கள் இல்லை என்றால் அதிபர் பதவி என்னும் இந்த ஐக்கிய சின்னம் கேள்விக் குறியாகிவிடக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.

இப்படி தேர்தலை ஒதுக்கி வைக் கவில்லை என்றால் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து அதிபராக பதவி ஏற்கக்கூடிய நிலை வரக்கூடும் என்றார் அவர். கொள்கை ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் பேசிய திரு சண்முகம், அதிபர் தேர்தலை சிறுபான்மை இனங் களுக்காக ஒதுக்கி வைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையைச் சில சிங்கப்பூரர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை தாம் ஒப்புக் கொள்வதாகக் கூறினார். இருந்தாலும் இந்த மாற்றங்கள் தொடர்பான நிலவரங்களையும் முழுமையான வாதத்தையும் மக்கள் முன்வைக்கும் பட்சத்தில் அதை மக்கள் ஏற்றுக்கொள் வார்கள் என்று தான் கருதுவதாக கூறினார்.