வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்துவ போதகர்களின் மற்ற சமயங்களைப் புண்படுத்தும் கருத்துகள் காரணமாக அவர் களுக்கு சிங்கப்பூரில் உரையாற் றுவதற்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மனிதவள அமைச்சு, உள் துறை அமைச்சைக் கலந்தா லோ சித்து, வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்துவ போதகர்களின் பல்வகை வேலை அனுமதிச் சீட்டுக்கான விண் ணப்பத்தை நிராகரித்துவிட்டது. போதகர்கள் சிங்கப்பூரில் உரையாற்றுவதற்காக குறுகிய கால வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இரு போதகர்களும் ஆத்திர மூட்டும் வகையில் மற்ற சமயங் களைப் பற்றி இழிவாகப் பேசி யிருக்கின்றனர்.
இரு கிறிஸ்துவ போதகர்களுக்கு உரை நிகழ்த்த அனுமதி மறுப்பு
1 mins read

