கவனக்குறைவால் மரணம் விளைவித்தவருக்கு 10 நாள் சிறை

கவனக்குறைவால் மரணம் விளைவித்தவருக்கு 10 நாள் சிறை

1 mins read

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிச்சென்று உயிர்ச்சேதம் விளைவித்த குற்றத்திற்காக வாசுதேவன், 69 என்பவருக்கு 10 நாள் சிறைத் தண்டனையும் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் நீதிமன்றம் நேற்று விதித்தது. சாலையின் நடுத் தடத்தில் சென்றுகொண்டிருந்த வாசுதேவன், திடீரென சாலையில் இடப்புறம் திரும்பியதால் அவ்வழியே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி மீது மோதினார். விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மரணம் அடைந்தார். விபத்து 2016 மே மாதம் 15ஆம் தேதி நடந்தது.