$10 மி. மோசடி; 14 ஆண்டு சிறை

$10 மி. மோசடி; 14 ஆண்டு சிறை

1 mins read

10 மில்லியன் டாலருக்கு மேல் மோசடி செய்த குற்றத்திற்காக சிங்கப்பூர் யுஈ செர்விஸ்கார்ப் முன்னாள் சொத்துடைமை நிர்வாக துணைத் தலைவர் லிண்டா லீக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மோசடிப் பணத்தில் $2.1 மில்லியன் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டது. அதில் S$900,000 லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் சோதனையில் மீட்கப்பட்டது. மிகப்பெரிய தொகை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் கடுமை யான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி டான் தீர்ப்புக்கு முன்னர் தெரிவித்தார். லீக்கு எதிராக 28 குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மேலும் 325 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரி விக்கப்பட்டது. இக்குற்றங்களை 2010 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் லீ புரிந்து இருக்கிறார்.