இணைய விற்பனைத்தளங்கள் மூலம் போட்டி ஏற்பட்டு இருப் பதாலும் விற்பனையில் மந்தம் ஏற் பட்டுள்ளதாலும் சில்லறை வர்த் தகத் துறைக்குப் புத்தொளியூட்ட சிங்கப்பூர் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள் ளூர் வர்த்தகச் சின்னங்களையும் புதிய சில்லறை வர்த்த கத்தையும் ஊக்குவிப்பதற்கான உதவிகளை அதற்கான அமைப்புகளிடமிருந்து பெற இயலும். இதற்காக ஸ்பிரிங் சிங்கப்பூர் இதர துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அடுத்த ஆண்டின் இறுதிவாக் கில் உள்ளூர் வர்த்தகச் சின்னங் களை வகைப்படுத்தி ஆர்ச்சர்ட் சாலையில் வடிவமைப்புக் கூடாரம் ஒன்று அமைக்கப்படும்.
உள்ளூர் சில்லறை வர்த்த நிறு வனமான Naiise நடத்தும் இந்த கூடாரத்தில் உள்ளூர் வடிவமைப் பாளர்கள் தங்களது பொருட்களை யும் படைப்புகளையும் காட்சிப் படுத்த இயலும். கிட்டத்தட்ட 60 உள்ளூர் தயாரிப்புச் சின்னங்கள் இதில் இடம்பெறக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நவநாகரிக உடை முதல் வாழ்க்கைபாணி தயாரிப்புகள் வரையிலும் இங்கு காட்சிப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் சில்லறை வர்த்தகத்தினர் மின்னிலக்கத்தை பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய திட்டம் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முன்வரும்.

