அமெரிக்காவின் டெக்சஸ் மாநி லத்தில் டெம்பிள் என்ற பகுதியில் சூறாவளி நிவாரண நடவடிக்கை களில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் நான்கு CH-47 சினூக் ஹெலிகாப் டர்கள் தங்களுடைய பணியை முடித்துக் கொண்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. ஒன்பது நாள் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்கப் பூர் குடியரசு விமானப் படை, டெக்சஸ் தேசிய ராணுவ காவல் படையுடன் சேர்ந்து செயல்பட்டு வீரர்களையும் உணவு, தண்ணீர், சாதனம் போன்ற பொருட்களையும் ஏற்றிச் சென்று உதவியது.
நிவாரண பணிகளில் ஈடுபட்டு உதவியதற்காக டெக்சஸ் தேசிய ராணுவ காவல்படை உயர் அதிகாரி கர்னல் ரோனல்ட் புர்க் கெட் சிங்கப்பூர் விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார். அவர் சிங்கப்பூர் விமானப் படை வீரர்களைச் சந்தித்தார். "டெக்சஸ் தேசிய ராணுவப் படை சார்பிலும் ஆயிரக்கணக்கான டெக்சஸ் மக்கள் சார்பிலும் உங் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். "உங்களுடைய ஆற்றல்மிக்க விமானப் போக்குவரத்து திறமைக் காக மட்டுமின்றி பேரிடர் நிகழ்ந்த உடனேயே நீங்கள் உதவிக்கு விரைந்து வந்ததற்காகவும் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கர்னல் ரோனல்ட் குறிப் பிட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் CH-47 சினூக் ஹெலிகாப்டரில் வழங்கீட்டுப் பொருட்களை படை வீரர்கள் ஏற்றிச் சென்று உதவினர். படம்: தற்காப்பு அமைச்சு

