எம்ஆர்டி வட்டப்பாதை வழித்தடம் 6 கட்டுமானத்திற்காக மூன்று ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் மதிப்பு $1.75 பில்லியன். இந்த ஒப்பந் தங்களின் பேரில் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2025ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்று இதனை அறிவித்தது. இந்த வழித்தடத்தில் மூன்று நிலையங்கள் அமையும். இது 4கி.மீ. நீளம் கொண்டது. ஹார்பர் ஃபிரண்ட், மரினா பே ஆகிய இப்போதைய நிலையங்களுடன் இந்தப் புதிய வழித்தடம் இணைந் திருக்கும். புதிய வழித்தடம் அமைக்கப் பட்டதும் சுற்றுப்பாதை ரயில் கட்ட மைப்பு பூர்த்தி அடையும் என்று ஆணையம் தெரிவித்து உள்ளது. வழங்கப்பட்டிருக்கும் குத்தகை கள் பற்றியும் ஆணையம் விளக்க மாக அறிவித்தது.
சீனா ஸ்டேட் கன்ஸ்ட்ரக்ன்ஷன் இன்ஜினியரிங் (சிங்கப்பூர் கிளை) நிறு-வனமும் நிஷிமார்ட்சூ கன்ஸ்ட் ரக்ஷன் என்ற நிறுவனமும் புதிய கெப்பல் எம்ஆர்டி நிலையத்தை கட்டவும் அதனுடன் தொடர்புடைய சுரங்கபாதைகளை அமைக்கவும் ஒப்பந்தத்தைப் பெற்று இருக்கின் றன. இந்தக் குத்தகையின் மதிப்பு $313.8 மில்லியன். கெப்பல் எம்ஆர்டி நிலையம் பாதாளத்தில் அமைந்திருக்கும். இரண்டு மாடிகளைக் கொண்டது. அது கெப்பல் முனையத்திற்கு பக் கத்தில் இருக்கும். கோ பிரதர்ஸ் பில்டிங் அண்ட் சிவில் இன்ஜினியரிங் கான்ட் டிராக்டர் என்ற நிறுவனத்திற்கு இந்தப் புதிய வழித்தடத்தில் அமையும் பிரின்ஸ் எட்வர்ட் நிலையத்தை இப்போதைய மரினா பே நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப் பாதையை அமைப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிங்கப்பூர் நிறுவனம் $225.35 மில்லியன் குத்தகையைப் பெற்று இருக்கிறது. இந்நிறுவனம் வடக்கு=கிழக்கு வழித்தடத்தில் ஊட்ரம் பார்க் போன்ற இதர ரயில் திட்டங்களில் கூட்டுத்தொழில் களில் ஈடுபட்டு இருக்கிறது. எதிர்கால தேவைகளைக் கருத்தில்கொண்டு கிம் சுவான் பணிமனையின் ஆற்றல் விரிவு படுத்தப்படும். அந்தப் பணிமனை இப்போது 70 ரயில் வண்டிகளை கையாளும் திறன் உடையது.

