நிரந்தரவாச உரிமையை இழந்த கல்வியாளர் வெளியேறினார்

நிரந்தரவாச உரிமையை இழந்த கல்வியாளர் வெளியேறினார்

1 mins read

டாக்டர் ஹுவாங் ஜிங், 60, என்ற கல்வியாளர் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றிற்காக 'செல்வாக்கு முகவராக' செயல்பட்டதன் காரணமாக அவரின் நிரந்தரவாச உரிமை பறிக்கப்பட்டது. டாக்டர் ஹுவாங் தன்னுடைய மனைவியுடன் சிங்கப்பூரை விட்டு சென்றுவிட்டார் என்று உள்துறை அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. இத்தம்பதியின் நிரந்தரவாச உரிமையை சென்ற மாதம் அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. சிங்கப்பூரில் இவர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. டாக்டர் ஹுவாங், லீ குவான் இயூ பொதுக் கொள்கை பள்ளியின் முன்னாள் பேராசிரியர். சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் சிங்கப்பூரில் பொது எண்ணத்திலும் செல்வாக்கு செலுத்த விரும்பிய செல்வாக்கு முகவராக அந்தப் பேராசிரியர் செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.