சிங்கப்பூரில் நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது. அது நான்கு மொழி களிலும் சுவரொட்டிகளை வெளி யிட்டு இருக்கிறது. நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை இந்தச் சுவரொட் டிகள் மக்களிடையே மேம்படுத்தும். ஜாமியா சிங்கப்பூர் அமைப்புக்கு சிங்கப்பூர் முஸ்லிம் மிஷனரி சங்கம் என்று பெயர். இது 'நீரிழிவுக்கு எதிரான போர்' கருத் தரங்கம் என்ற நிகழ்ச்சியில் சுவ ரொட்டிகளை வெளியிட்டது. இந்தக் கருத்தரங்கு ஜாமியா அல்ஜுனிட் கட்டடத்தில் நேற்று நடந்தது. இம்மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப், குடும்ப மருத்துவரான டாக்டர் டாரன் சென், கூ டெக் புவாட் மருத்துவமனையில் மூத்த ஆலோ சகராக இருக்கும் இணைப் பேராசிரியர் டாக்டர் வி.எஸ். செல்வன், வேலையிட மருத்துவர் டாக்டர் சாய்ஃபுல் நிசாம் சுபாரி ஆகியோர் கருத்தரங்கில் உரை யாற்றினர்.
நீரிழிவை எப்படி கட்டுப்படுத் துவது என்பது பற்றி இந்தக் குழு விவாதித்தது. நீரிழிவை ஒழித்துக் கட்டும் வகையில் நலமான உணவுகளை உண்ணும்படியும் நலமான வாழ்க் கைப்பாணியைக் கடைப்பிடிக்கும் படியும் சென்ற மாதம் சிங்கப்பூரர் களுக்கு பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜாமியா அமைப்பு இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.

