அதிகமான மூத்தோர் சமூகத் தொண்டாற்ற புதிய திட்டம்

அதிகமான மூத்தோர் சமூகத் தொண்டாற்ற புதிய திட்டம்

2 mins read

சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 45 வயதுள்ளவர்களைத் தொண்டூழி யத்தில் ஈடுபடுத்த 'ஆர்எஸ்விபி சிங்கப்பூர்' என்ற லாபநோக்கற்ற அமைப்பு விரும்புகிறது. பதவி ஓய்வுபெறுவதற்கு முன் னதாக பெரியவர்கள் தொண்டூழி யத்தைத் தொடங்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக் கம். 'சிங்கப்பூர் மூத்த தொண்டூ ழியர்கள் நிறுவனம்' என்று குறிப் பிடப்படும் இந்த அமைப்பு, 'நோக் கத்துடன் பதவி ஓய்வு' என்ற திட்டத்தை நேற்று தொடங்கியது. குறைந்தபட்சம் 45 வயதுள்ள ஊழியர்களில் அதிகமானோரை சமூகத்திற்குச் சேவையாற்றும்படி ஊக்கமூட்டுவது இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம்.

ஆர்எஸ்விபி சிங்கப்பூர் அமைப் புடன் முதிய ஊழியர்கள் பங்காளி களாகச் சேர்ந்து தங்களுடைய நிறுவனங்கள் மூலம் பல்வேறு அமைப்புகளில் தொண்டூழிய வாய்ப்புகளைப் பெறுவது புதிய திட்டத்தின் இலக்கு. ஓய்வுபெற திட்டமிடும், சமூ கத்திற்கு உதவ விரும்பும் ஊழியர் களுக்கு ஐந்து மாத காலத்தில் அவர்களின் நாட்டம், நேரம், குறிக் கோள் ஆகியவற்றின் அடிப்படை யில் தொண்டூழிய பணி அறிமுகப் படுத்தப்படும். இந்த முன்னோடித் திட்டத்தில் 10 நிறுவனங்களைச் சேர்க்க ஆர்எஸ்விபி சிங்கப்பூர் விரும்பு கிறது. இந்த அமைப்பின் தேசிய மூத்த தொண்டூழியர் மாதம் நேற்று ஐடிஇ மத்திய கல்லூரியில் தொடங்கியது. அப்போது இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரர்களைப் போலவே மூத்த தொண்டூழியர்களும் தங் களுடைய நேரத்தையும் திறமை களையும் பயன்படுத்தி கருணை மிக்க, பிணைப்புமிக்க சமூகத்தைப் பலப்படுத்த உதவ முடியும் என்று நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் தெரி வித்தார்.