தண்டவாள கொக்கிகள் உடைந்து 6 மணி நேரம் இலகுரக ரயில் சேவை பாதிப்பு

தண்டவாள கொக்கிகள் உடைந்து 6 மணி நேரம் இலகுரக ரயில் சேவை பாதிப்பு

1 mins read
6151b4f2-7695-437d-b7d7-68768fee5d4a
-

வழித்தடத்தில் நேற்று 6 மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை இல்லை. ரயில் தண்டவாளத்திற்கு ஆதரவாக பொருத்தப்பட்டிருக்கும் இரு கொக்கிகள் உடைந்துவிட்ட தால் அந்த வழித்தடத்தில் சமிக்ஞை முறையும் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் தரைத் தண்டவாளமும் பாதிக்கப் பட்டுவிட்டன. இதுவே சேவை தடைபட்டதற்குக் காரணம். தண்டவாளத்திலேயே இரண்டு ரயில் வண்டிகள் நேற்று காலை 9.45 மணிக்கு நின்றுவிட்டன. இதனால் அந்த வழித்தடம் முழுவதுமே ரயில் சேவைகள் இல்லாமல் போய்விட்டது. பொறியாளர்கள் நடத்திய சோதனைகள் மூலம் தண்டவாளக் கொக்கிகள் சேதம் அடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சமிக்ஞை முறை பாதிக்கப்பட்டது. ஃபினிக்ஸ் மற்றும் புக்கிட் பாஞ்சாங் ரயில் நிலையங்களுக்கு இடையில் தரைத் தண்டவாளமும் பாதிப்புக்கு உள்ளானது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று மாலை 4.27 மணிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. உடனடியாக பொறியாளர்கள் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். மாலை 4.18 மணிக்குச் சேவை முற்றிலும் வழக்க நிலைக் குத் திரும்பியது. சேவை பாதிக் கப்பட்டதற்காக எஸ்எம்ஆர்டி மன் னிப்பு கேட்டுக்கொண்டது.

புக்கிட் பாஞ்சாங் இலகுரக வழித்தடத்தில் நின்றுவிட்ட ரயில் வண்டிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்