தொண்டூழியர் அறப்பணிக்குச் சிறப்பு

தொண்டூழியர் அறப்பணிக்குச் சிறப்பு

2 mins read
894ddbb2-012a-4a94-92c7-5f20b2fe84b0
-

முஹம்மது ஃபைரோஸ்

பல்வேறு கோவில் நிகழ்ச்சிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்வதில் தொண்டூழியர் களின் பங்கு அளப்பரியது. அவ்வாறு தொண்டூழியத்தை அங்கீகரிக்கும் விதத்தில் 62 தொண்டூழியர்கள் இந்து அறக் கட்டளை வாரியத்தின் தொண் டூழியர் விருது நிகழ்ச்சியில் நேற்று அங்கீகரிக்கப்பட்டனர். 1999ஆம் ஆண்டில் முதல் முறையாக தொடங்கப்பட்ட தொண்டூழியர் விருதுகள், இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வ கிக்கப்படும் நான்கு கோவில்கள், போதையர் மறுவாழ்வு இல்லமான 'ஆஷ்ரம்', சரஸ்வதி பாலர் பள்ளிகள் போன்றவற்றில் தொண்டூழியம் புரிபவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

அன்று முதல் இன்றுவரை 400க்கும் மேற்பட்ட தொண் டூழியர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டுள்ளன. உன்னத விருது பிரிவில் விருதுபெற்றவர்களில் ஒருவர் திரு ரா. ராமநாதன், 58. குறைந்தது 20 ஆண்டுகள் சமூக சேவை புரியும் தொண்டூழியர்களுக்கு உன்னத விருது வழங்கப்படுகிறது. ஆனால் சமூக சேவையில் திரு ராமநாதன் கொண்டிருக்கும் ஈடுபாடு 50 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் நான்கு கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் தொண்டூழியராக இடம்பெற்றுள்ள பெருமை இவரைச் சேருகிறது.

"கோவில் நிகழ்ச்சிகளைச் சீராக நடத்துவது ஒரு பெரிய சவால். அவ்வகையில் நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடந்தேறுவதில் ஒவ்வொரு தொண்டூழியரின் பங் களிப்பும் இன்றியமையாதது. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும் போது எங்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது," என்றார் ஸ்ரீ வைரா விமட காளியம்மன் கோவிலின் நிர்வாகக்குழுவில் தற்போது உறுப் பினராக செயல்படும் திரு ராம நாதன்.

மகா கருணா பௌத்த சங்கத்தின் சார்பில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் 'தோழர்' விருதை பெற்றுக்கொண்ட பௌத்த பிக்கு தவத்திரு டாக்டர் கே. குணரத்ன (இடது), பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ்வுடன் (வலது) உரையாடுகிறார். படம்: இந்து அறக்கட்டளை வாரியம்