சாங்கி சிறைச்சாலைக்கு முன் னால் ஜூலை 13ஆம் தேதியன்று சட்டவிரோதமாக கூடியிருந்த குற்றத்திற்காக 17 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது. சிங்கப்பூருக்குள் போதைப் பொருளைக் கடத்தி வந்த குற்றத்திற்காக 29 வயது மலேசி யரான பிரபாகரன் ஸ்ரீவிஜயன் ஜூலை 14ஆம் தேதி தூக்கிலிடப் பட்டார். அதற்காக, இவர்கள் அனைவரும் கண்விழித்து துக்கம் அனுசரித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு களையும் பிரபாகரனின் படங் களையும் பறிமுதல் செய்தனர் என்று கூடியிருந்தவர்களில் ஒரு வரான வலைப்பதிவாளர் குமாரி ஹான் குறிப்பிட்டார். அவர்கள் அதற்கு கட்டுப்பட்டு நடந்தனர் என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தில் ஈடுபட்ட இன் னொருவரான 'தி ஆன்லைன் சிட்டிசன்' எனும் இணையத் தளத்தின் தலைமை ஆசிரியர் திரு சூ, இம்மாதம் 6ஆம் தேதி, சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் போது குடிநுழைவு அதிகாரி களால் தடுத்து நிறுத்தப்பட்ட தாகக் குறிப்பிட்டார். திரு சூவும் குமாரி ஹானும், தாங்கள் நாட்டைவிட்டு வெளி யேற முடியாது என்று இதற்குமுன் யாரும் தங்களிடம் குறிப்பிட வில்லை என்று கூறினர். நாட்டை விட்டு வெளியேறு வதைத் தடுத்ததை 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' எனும் மனித உரிமை அமைப்பு இம்மாதம் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக் கையில் கண்டித்துள்ளது.

