கவிஞர் திருவேங்கடம் மரணம்

கவிஞர் திருவேங்கடம் மரணம்

1 mins read

சிங்கப்பூரின் மூத்த கவிஞர் களில் ஒருவரான பெ திருவேங்கடம் காலமானார். அவருக்கு வயது 74. மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த கவிஞர் சென்ற சனிக்கிழமை காலமான தாக அவரின் குடும்பத்தார் தமிழ் முரசிடம் தெரிவித்தனர். மாதவி இலக்கிய மன்றத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவரான திருவேங்கடம், சிங்கை, மலேசிய கவியரங்குகளில் அதிகம் பங் கேற்ற பெருமைக்குரியவர். சிங்கை வானொலியில் இடம் பெற்ற கவிமாலை, கவிஅரங்கம், கவிச்சோலை நிகழ்ச்சிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். சிறகுகள், முருகன் துதிப்பாடல், துளசி, தங்கவயல், Desires ஆங்கில நூல் உள் ளிட்ட பல கவிதை நூல்களைப் படைத்துள்ளார் கவிஞர் திருவேங்கடம். கவிஞரின் மறைவு சிங்கப்பூர் கவியுலகுக்கு பேரிழப்பாகும். அவருக்கு மனைவி, மகள், மகனுடன் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.