அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளன்று பொது மக்களும் வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டிய போக்கு வரத்து, பாதுகாப்பு விதிமுறை களை போலிஸ் நேற்று வெளி யிட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிலைய மாக செயல்படவுள்ள கிங் ஜார்ஜ் அவென்யூவில் உள்ள மக்கள் கழக தலைமையகம், வேட்புமனத் தாக்கல் நாளான செப்டம்பர் 13ஆம் தேதி, புதன்கிழமை காலை 10 மணி முதல் திறக்கப்படும். அதன் பின்னரே பொதுமக்கள் அந்த இடத்துக்கு வர அறிவுறுத் தப்படுகின்றனர். வேட்புமனுத் தாக்கல் காலை 11 மணி முதல் தொடங்கும். வேட்பாளர்கள் முன்கூட்டியே வருமாறு நினைவூட்டப்படுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அடையா ள ஒட்டு வில்லைகள் பொருத் தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் நிலையத் துக்குள் செல்லவும் உள்ளே நிறுத்தவும் அனுமதிக்கப்படும். மக்கள் கழகத்திலும் அதைச் சுற்றிலும் பாதுகாப்புச் சோதனை களை போலிசார் மேற்கொள்ள உள்ளனர். கூரான பொருட்கள், எளிதில் தீப்பற்றி எரியக்கூடய திரவங்கள் = வாயுக்கள், ஆபத்தான பொருட் கள் போன்றவை இருக்கிறதா என சோதனையிடப்படுவதுடன் ஆதரவாளர்கள் கொண்டு வரும் பைகளும் பாதுகாப்புச் சோதனை களுக்கு உட்படுத்தப்படும் என் றும் போலிஸ் தெரிவித்துள்ளது.

