2018 ஜூன் முதல் பொதுப் போக்குவரத்தில் கடன், பற்று அட்டைகளைத் தட்டிச் செல்லலாம்

2018 ஜூன் முதல் பொதுப் போக்குவரத்தில் கடன், பற்று அட்டைகளைத் தட்டிச் செல்லலாம்

1 mins read
484f5e62-3dc4-43c3-8a58-72161fc7a7f5
-

கையொப்பம் இடவேண்டிய அவ சியமில்லாத கடன் அல்லது பற்று அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து கட்டணங் களைச் செலுத்தக்கூடிய முன் னோட்டச் சோதனைமுறை, வருங் காலத்தில் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து சேவையிலும் நடப்புக்கு வரவிருக்கிறது. கட்டணத்தைக் கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளும் கட் டணமுறை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 'விசா', 'நெட்ஸ் 2.0' பயன்படுத்துவோருக் கும் நீட்டிக்கப்படும் என போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். இந்தக் கட்டணமுறையின் முன்னோட்டச் சோதனை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 'மாஸ்டர்கார்ட்' அட்டை பயன் படுத்துவோருக்காகத் தொடங்கப் பட்ட இந்தச் சோதனையில் தற் போது 100,000க்கும் மேலானோர் பங்குபெறுகின்றனர். கடன் அல்லது பற்று அட்டை யைச் சாதனத்தில் தட்டி கட்டணம் செலுத்தக்கூடிய புதிய இயங்கு முறையுடன், 'ஈசி-லிங்க்' அல்லது 'நெட்ஸ் ஃபிலாஷ்பே' போன்ற 'செபாஸ்' அட்டைகளுக்கான தேவை நீக்கப்படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பொதுப் போக்குவரத்து முறை முற்றிலும் ரொக்கமற்றதாகி விடும். படம்: தி நியூ பேப்பர்