பசுமைக் கட்டடங்களால் மின்சக்தி பயன்பாடு குறைவு

பசுமைக் கட்டடங்களால் மின்சக்தி பயன்பாடு குறைவு

1 mins read
c72b7042-144e-4f48-b88d-8dd1a436b7f7
-

பசுமைக் கட்டடங்களில் வேலை செய்பவர்களுக்கு உடல் சோர்வு, தலைவலி, தோல் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு சற்றே குறைவாக இருக்கிறது எனக் கட்டட, கட்டுமான ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தால் மின்சக்தியும் சிக்கனப்படுத்தப் படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்ட அதே நாளில், மேலும் பல கட்டடங்கள் இதே முறையில்தான் கட்டப்பட இருப்ப தாகவும் தகவல் வெளியிடப்பட்டது. இதன் வழி கட்டடத்தினுள் வேலை செய்பவர்களுக்கு சுகாதாரமான காற்றோட்ட வசதி இருக்கும்.

மேலும், மின்சக்தியின் பயன் பாடு குறித்த தகவலையும் அந்தக் கட்டட உரிமையாளர்களின் விவரங்களோடு தெரிவிப்பதும் இதில் அடங்கும். இந்த ஆய்வை எட்டு பசுமைக் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்ட கட்டடங்களிலும் பசுமைக் குறியீடு வழங்கப்படாத ஆறு கட்டடங் களிலும் கட்டட, கட்டுமான ஆணையமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது. மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி,- மாநாட்டு மையத்தில் நடந்த பசுமைக் கட்டடங்கள் வாரம் துவக்க விழாவில் இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இந்த ஆய்வு 2014ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கப்பட்டு மூன்றறை ஆண்டுகள் நடத்தப் பட்டது. ஆய்வில் இரு வெவ்வேறு கட்டடங்களில் மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் அளவில் வித்தியாசங்கள் தெரிந்தன. பசுமைக் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற கட்டடங்களில் நுண்ணுயிர்கள் அளவு குறை வாகவே இருந்ததாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.