ஹலிமாவுக்கு பல தரப்பினரும் திரண்டு வந்து ஆதரவு, பாராட்டு

ஹலிமாவுக்கு பல தரப்பினரும் திரண்டு வந்து ஆதரவு, பாராட்டு

1 mins read
7d891f5c-f7c4-4f4b-89e4-6fc28ffb1efb
-

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப்பிற்கு எல்லா தரப்பினரும் ஆதரவு தெரி வித்து வருகிறார்கள். திருவாட்டி ஹலிமா அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்று நேற்று மக்கள் கழகத்தின் தலைமையகத் தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அங்கு நூற்றுக்கணக்கான ஆதரவாளர் கள் குவிந்தனர். பலரும் திருவாட்டி ஹலிமாவின் பிரசார நிறமான ஆரஞ்சு நிறத்தில் வந்திருந்தனர். பலர் 'எச்' என்ற எழுத்துடன் கூடிய ஆரஞ்சு நிற குடைகளுடன் வந்தனர். இந்த நிறம் ஐக்கியத்தைக் குறிப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

திருவாட்டி ஹலிமாவும் அவ ருடைய தேர்தல் பிரசாரக் குழுவின ரும் வேட்புமனு நிலையத்திற்கு வந்தபோது ஏராளமானவர்கள் ஒன்றுகூடி பேராதரவு அளித்தனர். ஆதரவு ஒலி விண்ணை எட்டியது. வாழ்த்துப் பூக்களும் பாராட்டு வில்லைகளும் குவிந்தன. மார்சி லிங்கில் வசிக்கும் திருவாட்டி இங் மூய் கி என்ற மாது பூங் கொத்தை வாங்கிக்கொண்டு தன் னுடைய ஜாலான் புசார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு வாட்டி ஹலிமாவுக்கு வாழ்த்துச் சொல்ல 10 நண்பர்களுடன் வந் திருந்தார். "உள்ளபடியே திருவாட்டி ஹலிமா எங்களை எல்லாம் நன் றாகப் பார்த்துக்கொண்டார். சிறார் களுக்குப் பாடபோதனை, குடும்பத் திற்குத் தேவையான பொருட்கள், சக்கர நாற்காலிகள் போன்றவற்றை யெல்லாம் பெற்றுத்தந்து உதவி யிருக்கிறார்," என்று இந்த 76 வயது மாது பாராட்டினார்.

மக்கள் கழகத் தலைமையகத்தில் திரண்டு திருவாட்டி ஹலிமாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்