சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப், இதுநாள்வரை தான் வசித்து வந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க போகிறார். வீவக வீட்டில் வசிக்கும் முதல் சிங்கப்பூர் அதிபர் இவரே. அதிபர் தேர்தலில் போட்டி இல் லாததையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டப் பிறகு செய்தியாளரிடம் பேசிய திருவாட்டி ஹலிமா, யீஷூனில் உள்ள தன்னுடைய குடும்ப வீட் டைவிட்டு வெளியேறி வேறு வீட் டில் வசிக்கும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என்று தெரி வித்தார்.
அதிபர் ஆன பிறகு எங்கே வசிக்கப்போகிறீர்கள் என செய்தி யாளர்கள் கேட்டதற்குப் பதில் அளித்த திருவாட்டி ஹலிமா, 63, "என் யீஷூன் வீட்டிலேயேதான் வசிக்கிறேன்," என்றார். "என்னுடைய வீடு அருமையான ஒரு வீடு, வசதியான வீடு. பல ஆண்டுகளாக அந்த வீட்டில் தான் வசித்து வருகிறேன்" என்று அவர் தெரிவித்தார். அந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று திருவாட்டி ஹலிமாவின் கணவர் முகம்மது அப்துல்லா அல்ஃஹப்ஷி, 63, தெரிவித்தார்.
யீஷூனில் உள்ள ஒரு புளோக்கின் ஆறாவது மாடியில் வசிக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப்பின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்படும். படம்: திமத்தி டேவிட்

