'டவர் டிரான்சிட்' பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஸ்பென்சர் டே பூன் வான், 43, என்ற 'ஊபர்' கார் ஓட்டுநருக்கு S$1,200 அபராதம் விதிக்கப் பட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி கிளமென்டி அவென்யூ 4, புளோக் 307க்கு அருகில் நிகழ்ந்தது. சம்பவ நாளன்று பிற்பகல் 3.10 மணியளவில் சேவை எண் 284 கொண்ட பேருந்தை ஓட்டிய வாறு இருந்தார் திரு மொகிதீன் சாகுல் ஹமீது, 47. அப்போது சாலையில் டேயின் காரும் ஓர் இழுவை வண்டியும் போக்கு வரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆகையால் மிகுந்த சிரமப்பட்டு மொகிதீன் தமது பேருந்தைத் திருப்ப வேண்டி இருந்தது.
ஊபர் ஓட்டுநருக்கு $1,200 அபராதம்
1 mins read

