மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும்படி அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறது. அக்குழுத் தொகுதியின் நான்கு எம்.பி.க்களில் ஒருவராக இருந்த திருவாட்டி ஹலிமா யாக்கோப், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பதவியைத் துறந்தார். இதையடுத்து, அவர் பிரதி நிதித்த மார்சிலிங் தொகுதியின் குடியிருப்பாளர்களையும் பணி களையும் அந்தக் குழுத் தொகு தியின் மற்ற மூன்று மக்கள் செயல் கட்சி எம்.பி.க்களும் இணைந்து கவனித்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல்: சிஜக வழக்கு
1 mins read

