சிறந்த எதிர்காலத்தை உருவாக்கு வது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சுகாதார இலக்குகளில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்துள்ளதாக 'தி லேன் சட்' சஞ்சிகை தெரிவித்துள்ளது. 188 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் 86.6 மதிப் பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தது. ஆய்வாளர்கள் 33 முக்கிய சுகாதாரக் கூறுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். காசநோய், மலேரியா விகிதங் கள், ஐந்து வயதுக்குமுன் இறப்பு உள்ளிட்ட கூறுகள் அதில் அடங் கும். 1990க்கும் 2016க்கும் இடைப் பட்ட காலகட்டத்தில் நாடுகள் இந்தக் கூறுகளில் அடைந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டது.
ஐநாவின் சுகாதார இலக்குகள்: முதலிடம் பிடித்தது சிங்கப்பூர்
1 mins read

