'இஸ்தானாவின் அழகையும் வனப்பையும் அதிகமானோர் ரசிக்க வேண்டும்'

'இஸ்தானாவின் அழகையும் வனப்பையும் அதிகமானோர் ரசிக்க வேண்டும்'

1 mins read
afa9e73c-a98f-4e8b-9354-c0ce12d8bc43
-

சிங்கப்பூரின் எட்டாவது அதிபரா கப் பதவியேற்கும் முன் நேற்றுக் காலை அதிபர் ஹலிமா யாக்கோப் புக்கு அவர் இனி பணியாற்றவி ருக்கும் இஸ்தானா மாளிகை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. 63 வயதாகும் அதிபர் ஹலிமா நேற்று அவரது யீ‌ஷூன் இல்லத்தி லிருந்து அதிபரின் அதிகாரத்துவ காரில் அழைத்து வரப்பட்டார். அந் தக் காருக்குப் பின்னால் பாது காப்புக் காரும் தொடர்ந்தது. இஸ்தானாவுக்கு காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்த திருவாட்டி ஹலிமாவை இஸ்தானாவின் உள் நிகழ்ச்சிகள் பிரிவு தலைவர் திரு சன்னி சியாவும் இதர அதிகாரி களும் வரவேற்று, இஸ்தானா மாளிகையில் உள்ள பல்வேறு அறைகள், வசதிகள், அதிபர் அலு வலகச் செயலவை, அதிபரின் அறை போன்றவற்றைச் சுற்றி காண்பித்தனர். பிரதான இஸ்தானா மாளிகை யைச் சுற்றியுள்ள இஸ்தானா வில்லா, ஸ்ரீ தெமாசெக், ராணுவக் காவல் இலாகா ஆகியவற்றைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா, பின்னர் இஸ்தானா வளாகத்தில் உள்ள பல்வேறு தோட்டங்களையும் சுற்றிப் பார்த்தார். அங்குள்ள தோட்டங்களின் வனப்புக்குப் பொறுப்பேற்றுள்ள தேசிய பூங்காக் கழகத்தின் குழும இயக்குநர் திரு வோங் துவான் வா அங்குள்ள தோட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.

இஸ்தானாவில் உள்ள பல்வேறு தோட்டங்களில் உள்ள மூலிகைகள் பற்றி அதிபர் ஹலிமாவுக்கு நேற்று விளக்கம் அளித்தார் இஸ்தானா தோட்டங் களுக்குப் பொறுப் பேற்றுள்ள தேசிய பூங்காக் கழகத்தின் குழும இயக்குநர் திரு வோங் துவான் வா (வலது).