சிங்கப்பூர் 52 ஆண்டுகளுக்குமுன் சுதந்திரம் பெற்ற முதல் சில மணி நேரங்களுக்குள், சிங்கப்பூர் "மலாய் நாடாக, சீன நாடாக அல் லது இந்திய நாடாக இருக்காது" என்று உறுதி அளித்தார் தேசத்தந் தையும் அப்போதைய பிரதமருமான திரு லீ குவான் இயூ. பல இன, பல கலாசார, பல சமய சமுதாயத்தை நிர்மாணிக்க அவர் அளித்த உறுதிமொழியை சிங்கப்பூர் நேற்று புதுப்பித்தது. திருவாட்டி ஹலிமா யாக்கோப் 47 ஆண்டுகளில் சிங்கப்பூரின் முதல் மலாய் அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். வாக்கெடுப்பின் மூலம் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை 1991ல் நடப்புக்கு வந்தபிறகு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலாய் இனத்தவரும் முதல் பெண் அதிபரும் இவரே என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார். சிங்கப்பூரின் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்கதொரு தருணம் என்று வர்ணித்த பிரதமர் லீ, "இன்று, திரு லீ குவான் இயூ அவர்கள் 1965 ஆகஸ்ட் 9ஆம் தேதி செய்த உறுதிமொழியை நாங்கள் மறுஉறுதிப்படுத்து கிறோம். மொழி, கலாசாரம், சமயம் ஆகிய வேறுபாடுகளின்றி ஒவ் வொருவருக்கும் அவருக்குரிய இடம் சமமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.
சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்ட திருவாட்டி ஹலிமா யாக்கோப் (நடுவில்), பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர்கள் டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், இதர அமைச்சர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். படம்: சாவ் பாவ்

