தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

1 mins read

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2ல் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 20களில் இருந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதோடு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவரும் தூக்கி எறியப்பட்டு, சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கருவிகளின் துணைகொண்டு அவரை மீட்டு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையில் அனுமதித்த்தனர். அவரது நிலைமையும் கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப் படுகிறது.