இவ்வாண்டின் இரண்டாம் கால் ஆண்டில் குடியிருப்பாளர்களுக் கான வேலையின்மை விகிதமும் நீண்டகால வேலையின்மை விகி தமும் சற்றே குறைந்தது. கடந்த மார்ச் மாதத்தில் 3.5 விழுக்காடாக இருந்த சிங்கப் பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 3.3 விழுக்காடாக குறைந்தது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகிய இருதரப்பினரையும் சேர்த்துப் பார்க்கையில், 2017 முதல் காலாண்டில் 3.2 விழுக் காடாக இருந்த வேலையின்மை விகிதம் இரண்டாம் காலாண்டில் 3.1 விழுக்காடாகக் குறைந்தது. 2016 இறுதியை ஒப்புநோக்க, இவ்வாண்டின் முதல் பாதியில் கூடுதலாக 4,000 சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசிகளும் வேலை யில் சேர்ந்தனர் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தக் காலகட்டத்தில் உள் ளூர் வேலைவாய்ப்பு கூடியிருப் பது கடந்த மூன்றாண்டுகளில் இதுவே முதல்முறை. அதே நேரத்தில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.2 விழுக்காடாக நீடிக்கிறது. இந்த விகிதம் ஓராண்டுக்கு முன்பிருந் ததைவிட அதிகம்.
வேலையின்மை விகிதம் சற்றே குறைந்தது
1 mins read

