ஆசியா பசிபிக் வட்டாரத்தின் வளர்ச்சி, சீனா-=அமெரிக்கா உறவுகள், ஆசியானின் மையத் தன் மையும் நம்பகத்தன்மையும், எதிர்கால நோக்குக்கொண்ட பொருளியல் ஆகிய மூன்றையும் சார்ந்துள்ளது என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார். ஆனால், நம்பிக்கை யான இந்த வட்டாரத்திலுள்ள நாடுகள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றார் அவர். ஆசிய நாடுகளில் தேசிய உணர்வு ஓங்கியுள்ள, உலகமய மாக் கலுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ள வேளையில் வளர்ச் சியடைய நாடுகள் ஒன்றுசேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று திரு டியோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் இருநாள் உச்சநிலை மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைப் பிரதமர், "வர லாறு, தேசியப் பெருமை, வளங்க ளுக் கான போட்டி ஆகியவற்றில் எல்லைப் பிரச்சினைகள் ஊறி யுள்ளன. ஆனால், நமது வட்டாரம் அதன் முழு வளப்பத்தை எட்ட, நிதானமான சிந்தனையும் அரசதந் திரமும் வெற்றிபெற வேண்டும். "இது உள்நோக்கிப் பார்ப்பதற் கான காலமல்ல. நாடுகடந்த மிரட்டல்களை எதிர்கொள்ளவும் வளர்ச்சிக்கும் வளப்பத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார் அவர்.

