பொருள் சேவை வரி மோசடியில் சிக்கிய முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள்

பொருள் சேவை வரி மோசடியில் சிக்கிய முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள்

1 mins read

பொருள் சேவை வரியை திரும்பப் பெறும் சுற்றுப்பயணிகள் சிலரிட மிருந்து மோசடி செய்ததாக இரண்டு முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். லி ஜியாங்சிங், 34, பாங் யாவ் பியா, 61 இருவரும் $68,000க்கு மேல் மோசடி செய்துள்ளனர். நவம்பர் 2011 முதல் ஆகஸ்ட் 2012 வரை 54 குற்றங்களில் ஈடுபட்டு $52,441.17 பொருள் சேவை வரியை லி திரும்பப்பெற்றுள்ளார். செப்டம்பர் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 43 குற்றங் களில் ஈடுபட்ட பாங் $16,015.86 தொகையைப் பெற்றுள்ளார். அவர் மீது ஊழல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் சட்டத்தின் கீழ் $10,553 சம்பந்தப்பட்ட 38 குற்றங்கள் சுமத்தப்பட்டன. சாங்கி விமான நிலையத்தின் பொருள் சேவை வரி திரும்பப் பெறும் இடத்தில் வேலை செய்த இருவரும் தனித்தனியே குற்றங் களைப் புரிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.