சிங்கப்பூர் இணையத்தள தாக்குதல்கள் அதிகரிப்பு

சிங்கப்பூர் இணையத்தள தாக்குதல்கள் அதிகரிப்பு

1 mins read

சிங்கப்பூரில் இணையத்தளத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இணையத் தாக்குதல் களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,800. ஆனால், மேலும் பல தாக் குதல்கள் பதிவு செய்யப்படவில்லை என்று முகவை தெரிவித்தது. கடந்த ஆண்டு 'ரேன்சம்' இணையத் தாக்குதல்கள் 19 முறை இடம்பெற்றுள்ளன. 2015ல் நடைபெற்ற தாக்குதல்களைவிட இரண்டு அதிகம். எனினும், இத்தகைய தாக்குதல்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன என்று முகவை குறிப்பிட்டது.

உதாரணத்திற்கு, டிரண்ட் சிங்கப்பூர் எனும் இணையப் பாது காப்பு மென்பொருள் நிறுவனம், தினந்தோறும் இதுபோன்ற 550 இணையத் தாக்குதல்களை கண்டுபிடிக்கிறது. இந்த ஆண்டு இணையத் தாக்குதல்களில் 'வானக்கிரை' என்பது சிங்கப்பூரில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அது மே மாதத்தில் சுமார் 500 இணைய கணக்குகளை சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான தாக்குதல்களிலிருந்து சிங்கப்பூர் தப்பியது. 2017ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடந்த முக்கிய இணையத் தாக்குதல்கள் அனைவரையும் விழிப்புநிலையில் வைத்துள்ளதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையின் தலைமை நிர்வாகி திரு டேவிட் கோ கூறினார்.