கட்டணக் குறைபாடு: அல்ஜூனிட்-ஹவ்காங் நகர மன்றம் தீர்வு

கட்டணக் குறைபாடு: அல்ஜூனிட்-ஹவ்காங் நகர மன்றம் தீர்வு

1 mins read

அல்ஜூனிட்-ஹவ்காங் நகர மன்றம் சேவை, பராமரிப்புக் கட்ட ணங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றிய புள்ளிவிவரத் தகவல்க ளைத் தானாகவே உருவாக்கும் வகையில் தன் கணக்கியல் முறையை மாற்றி அமைத்துள்ளதாக சுயேச்சை கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி தெரிவித்தது. தானியக்க முறையில் பெறப் பட்டுள்ள தகவல்களைப் பயனீட் டாளர்கள் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த அது விரிவான பரிசோதனையைச் செய்துள்ளது. வரவுக்குரிய கணக்குகளுடன் தகவல்கள் ஒப்பிடப்பட்டு சரிசெய் யப்படும் என்று அல்ஜூனிட்= ஹவ்காங் நகர மன்றம் நேற்று வெளியிட்ட மாதாந்திர முன்னேற்ற அறிக்கையில் கேபிஎம்ஜி குறிப்பிட் டது. சேவை, பராமரிப்புக் கட்ட ணங்களில் நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்படுவதன் தொடர்பில் அந்த நகரமன்றம் கணக்குத் தணிக்கை விவகாரம் ஒன்றைத் தீர்த்து வைத்துள்ளது. இந்நாள் வரை, பாட்டாளி கட்சி நிர்வகிக்கும் அந்த நகர மன்றம் கடந்த கணக்குத் தணிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிதி, ஆளுமை தொடர்பான 17 பிரச் சினைகளில் 12க்கு தீர்வு கண்டு உள்ளது.