டௌன்டவுன் வழித்தடம் 3ல் நேற்று அவசரகால மீட்புப் பயிற்சி நடந்தது. அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரயில் தண்டவாளங் களில் மக்கள் நடந்துவந்தார்கள். டௌன்டவுன் வழித்தடம் 3 அக்டோபர் மாதம் திறக்கப்படு கிறது. அதற்கு முன்னதாக அதில் சமூகத்தை ஈடுபடுத்தும் முயற்சி யின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நடவடிக்கை நடந்தது. கட்டப்பட்டு வரும் கேலாங் பாரு ரயில் நிலையத்திற்கும் மாத்தார் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் ஒரு ரயில் நின்றுவிட்டது. அதிலிருந்து இறங்கி பயணி கள் தண்டவாளம் வழியாக நடந்து மேல் வழியாக வெளியேறினர். இப்படி மீட்புப் பயிற்சி நடத்தப் பட்டது. டௌன்டவுன் வழித்தடம் 3ல் 16 ரயில் நிலையங்கள் உள் ளன.
ஃபோர்ட் கேனிங் நிலையம் முதல் சிங்கப்பூர் எக்ஸ்போ நிலை யம் வரையிலான அந்த 16 ரயில் நிலையங்களும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அந்த நிலையங்கள் பற்றி பொதுமக்கள் நேரடியாக நன்கு தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தொடர்ச்சியாக பல சமூக ஈடு பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற் பாடு செய்து இருக்கிறது. இந்த வழித்தடம் திறக்கப்பட்ட தும் இது முற்றிலும் செயல்பட தொடங்கும். இதுதான் 42 கி.மீ. நீளமுள்ள சிங்கப்பூரின் ஆக நீள மான எம்ஆர்டி சுரங்கப்பாதையாக இருக்கும்.

