ஜோகூர் சுல்தான், அரச குடும்பத்துக்கு பிரதமர் விருந்து

ஜோகூர் சுல்தான், அரச குடும்பத்துக்கு பிரதமர் விருந்து

1 mins read
739afd28-43da-4183-a0a5-1449f6c27d91
-

ஜோகூர் சுல்தான் தம்பதிக்கும் ஜோகூர் அரச குடும்பத்தினருக் கும் பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய துணைவியார் திரு வாட்டி ஹோ சிங்கும் நேற்று சிங் கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் விருந்தளித்துச் சிறப்பித்தனர். ஜோகூரும் சிங்கப்பூரும் நெடு நாட்களாக அனுபவித்து வரும் சிறப்பான நல்லுறவை புலப்படுத்தும் வகையில் விருந்து அமைந்தது. ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தர், ஜோகூர் அரசியார் ராஜா ஷரித் சோப்பியா பிந்தி அல்மார்ஹும் சுல்தான் இட்ரிஷ் ஷா இருவருடன் ஜோகூர் அரச குடும்பத்தினர் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் பிரதமரின் புதல்வர் லி ஹோங்யி, உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோரும் விருந்தில் கலந்துகொண்டனர். இதற்கிடையே, எஃப்1 கார் பந்தயத்தைக் காணவரும்படி தாம் விடுத்த அழைப்பை ஜோகூர் சுல்தான் ஏற்றுக்கொண்டது குறித்து தான் மகிழ்ச்சி அடைவ தாக பிரதமர் திரு லீ தெரிவித்தார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு