ஹெங் ஸி யோங், 44, என்ற ஒரு நிறுவன இயக்குநருக்கு லஞ்சம் தொடர்பில் விதிக்கப்பட்ட ஐந்து வாரச் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இருக் கிறது. அது அவருக்கு $35,000 அபராதம் விதித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொகையையும் நிறுவனத்திற்கு உண்மையிலேயே ஏற்பட்ட இழப்பை யும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சிறைத்தண்டனை என்பது மிகையான ஒன்று என்று மேல்முறையீட்டு நீதிபதி சாவ் ஹிக் டின் சென்ற வாரம் தீர்ப்பில் தெரிவித்தார்.
இயக்குநரின் சிறைத்தண்டனை ரத்து
1 mins read

