விபத்து; சாட்சியைத் தேடும் ஓட்டுநர்

விபத்து; சாட்சியைத் தேடும் ஓட்டுநர்

1 mins read
abd43e7c-1aa8-4f78-8cd1-ad3c83e28fdc
-

தீவு விரைவுச்சாலையைக் கடக்க முயன்று காரில் மோதி ஒருவர் காயமுற்ற சம்பவத்தில் கார் ஓட்டுநர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியை தமது ஃபேஸ்புக்கில் நாடியுள்ளார். கிளன்டோல்ஃப் சுவா எனப்படும் அவர் கடந்த சனிக்கிழமை காலை துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் தாம்சன் வெளியேறும் பாதையில் தமது காரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்பொழுது ஓர் ஆடவர் சாலையைக் கடந்து தனது பாதையை நோக்கி வந்ததைக் கண்டார் அவர். வாகன ஒலியை எழுப்பியும் அவர் பாதையை விட்டு அகலவில்லை. சுமார் 80 கி.மி. வேகத்தில் சென்று கொண்டிருந்த அவர் உடனடியாக காரை நிறுத்தும் விசையை அழுத்தியுள்ளார். இதனால் அந்த ஆடவருக்கு காயம் ஏற்பட்டது. பாதையைக் கடக்க முயன்ற 54 வயது முதியவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.