இணைய மிரட்டல்களை எதிர்த்து போரிடுவதில் ஆயத்த நிலையை ஊக்கப்படுத்த ஆசியான் வட் டாரத் தொழில்நுட்ப அதிகாரிக ளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள் ளது. அந்தப் பயிற்சிக்காக சிங்கப்பூர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு $ 1.5 மில்லியனை ஒதுக்கி இருப் பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித் துள்ளார். மேலும், இந்த ஒதுக்கீடு ஆசி யானை ஒருங்கிணந்த, இணையப் பாதுகாப்பு வட்டாரமாக உருவாக் கும் முயற்சி என்றார் அவர். நேற்று இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற வருடாந்திர இணையப் பாதுகாப்புக்கான ஆசியான் அமைச்சர் நிலை மாநாட்டின் தொடக்க விழாவில் டாக்டர் யாக்கூப் கலந்துகொண்டார்.
அம்மாநாட்டின் தொடக்க உரையில் டாக்டர் யாக்கூப், "எதிர் கால மின்னிலக்க பொருளியலின் பலனை முழுமையாக அடைய ஆசியான் நாடுகள் இணைய அச்சுறுத்தல்கள் மீது கவனம் செலுத்துவது அவசியம்," என்று கூறினார். ஆசியான் உறுப்பு நாடுகளின் 18 அதிகாரிகளுக்கு இணைய அச்சுறுத்தலைக் கண்டறிதல், அச் சுறுத்தல் விதம், அச்சுறுத்தலில் இருந்து மீள்வது, தடயவியல் போன்றவைகளில் பயிற்சி அளிப் பது நோக்கம். புவியியல் எல்லைகளைத் தாண்டியும் இணையக் குற்றங்கள் இருக்கக்கூடும் என்பதால் எல்லா ஆசியான் நாடுகளும் ஒருங் கிணைந்து இதற்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியு றுத்தினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்படவேண்டிய சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு மசோதா அடுத்த ஆண்டு நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய் யப்படும் என்றார் அமைச்சர்.

