தொடர்பாக புதிய பாதுகாப்பு வழிமுறைகள் பள்ளி வளாகத்தில் காற்பந்து விளையாடும் போது கோல் கம்பத் தின் மேல்சட்டம் முறிந்து விழுந்து ஒரு பள்ளிச் சிறுவன் உயிர் இழந் ததைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு புதிய பாதுகாப்பு வழி முறைகளை அறிவித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான கோல் கம்பப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குரிய வழிமுறைகளை கல்வி அமைச்சு பிறப்பித்துள்ளதாக நேற்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வழிமுறைகளில் ஒன்று, காற்பந்து விளையாட்டில் பயன் படும் கோல் கம்பத்தின் மேல் சட்டத்தின் உயரம் 1.8 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால், பள்ளிகள் அதற்கான எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை வைக்கவேண்டும்.
இரண்டாவதாக, மடித்து வைக்கக்கூடிய கோல் கம்பத்தை பள்ளிகள் இனி பயன்படுத்தக் கூடாது. இந்த விபத்து குறித்து புலன் விசாரணை மேற்கொண்டுவந்த போலிஸ் அதிகாரி இரினா இங், அரசாங்க மரண விசாரணை அதி காரி மார்வின் பேயிடம் பின் வருமாறு விளக்கினார். "கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி, 12 வயது முகம்மது ஹம் பாலி சுமாத்தியும் அவன் நண் பர்களும் காலை சுமார் 8.45 மணிக்கு பள்ளியின் உடற்பயிற்சி வகுப்பின்போது காற்பந்து விளை யாடிக்கொண்டிருந்தனர். "கேலாங் மெதடிஸ்ட் உயர் நிலைப் பள்ளி மாணவர்களான அவர்கள், அப்பொழுது விளை யாட்டுத்திடலில் இருந்த சிறிய கோல் கம்பத்தைப் பயன்படுத்தி விளையாடினார்கள்.

