பிள்ளைகளை நினைத்து பெற்றோர் பெருமைப்பட இரு நாள் குடும்ப விழா

பிள்ளைகளை நினைத்து பெற்றோர் பெருமைப்பட இரு நாள் குடும்ப விழா

1 mins read

'உங்களை நினைத்து எங்களுக்குப் பெருமை என்று பிள்ளைகளிடம் கூறும்படி பெற்றோருக்கு ஊக்கமூட்டும் நோக்கத்தில் இரண்டு நாள் குடும்ப விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சிறார் தினத்தைக் குறிக்கும் வகையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுடன் சேர்ந்து 'மைன்ட்சாம்ப்ஸ்' பாலர்பள்ளி நிறுவனம் ஏற்பாடு செய்யும் அந்த விழா அக்டோபர் 7ஆம் தேதியும் 8ஆம் தேதியும் சிங்கப்பூர் எக்ஸ்போவில் உள்ள முதலாவது அரங்கிலும் 'மேக்ஸ் ஏட்ரியா' கலைக்கூடத்திலும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வெற்றிகரமான சிறுசிறு காரியங்களைப் போற்றிப் புகழ்ந்து அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட விழாவின் மூலம் வாய்ப்பு ஏற்படும் என்று இந்தப் பாலர் பள்ளிக்கூடம் நம்புகிறது. 'உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது' என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அவ்வளவாக கூறுவதில்லை என்பது இந்தப் பள்ளிக்கூடம் அண்மையில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.