'ஜிபைக்ஸ்' நிறுவனத்தின் 3,000 வாடகை சைக்கிள் திட்டம்

'ஜிபைக்ஸ்' நிறுவனத்தின் 3,000 வாடகை சைக்கிள் திட்டம்

1 mins read
44bb59ef-1333-40d7-8524-f1fc397e7311
-

சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாத காலமாகச் செயல்பட்டு வரும் 'ஜிபைக்ஸ்' என்ற வாடகை சைக்கிள் நிறுவனம் 3,000 சைக்கிள்களை இந்த ஆண்டு முடிவிற்குள் சிங்கப்பூர் முழுவதும் வாடகைக்குவிட இருக்கிறது. இவற்றையும் சேர்த்து பல்வேறு வாடகை சைக்கிள் நிறுவனங்களும் மொத்தம் சுமார் 30,000 சைக்கிள் களை வாடகைக்குக் கொடுக்கின்றன. 'ஜிபைக்ஸ்' நிறுவனம் விரிவடைந்தபோதும் அது வாடகை சைக்கிள் பயனீடு தொடர்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். சிங்கப்பூரில் பொது இடங்களில் வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையம் இங்கு செயல்படும் வாடகை சைக்கிள் நிறுவனங்கள், தேசிய பூங்காக் கழகம் 16 நகர மன்றங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. 'ஜிபைக்ஸ்' நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு தன்னுடைய சைக்கிள்களையும் இதர தொழில்நுட்பங்களையும் நடப்புக்கு கொண்டுவரலாம் என்று நம்புகிறது.