மீன்களை சிலேத்தார் ஆற்றில் விட்ட குற்றத்திற்காக சிங்கப்பூரர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பிற்பகல் 3.00 முதல் 4.00 மணிக்குள் லேரி டான் சின் குவான், 43, இந்தக் குற்றச் செயலைப் புரிந்தார். இதுபோன்று ஆற்றில் நச்சுத் தன்மையுள்ள மீன்களை விடும் சம்பவம் இதுவே முதல் முறை. பொதுப் பயனீட்டுக் கழகம் தொடர்பான குற்றம் தொடர்பில் டான் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று வேளாண்=உணவு கால்நடை மருத்துவ ஆணையத்தின் வழக்கறிஞர் யாப் டெக் சுவான் தெரிவித்தார். பொதுப் பயனீட்டுக் கழகத்தின் குற்றம் தொடர்பான எந்தத் தகவலும் திரு யாப் உறுதிப் படுத்தவில்லை. ஆற்றில் விடப்பட்ட திருக்கை மீன்கள் சிலேத்தார் ஆற்றுப் பகுதியில் தென்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
நச்சுத் தன்மையுள்ள திருக்கை மீன்களை ஆற்றில் விட்டதாக ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
1 mins read

