விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
253c743b-8131-4f5f-b274-95780aa94e52
-

தாய்லாந்துப் பெண்களுக்கு ஒரு மாத கால விசா வழங்குவதற்கு ரேமன் லிம் பூன் ஐயன் என்பவரிடம் இருந்து $1,680 லஞ்சம் பெற்றதாக குடிநுழைவுத்துறை பெண் அதிகாரி ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கேத்தரின் லிம் (படம்) என்ற அந்த அதிகாரி 2014 டிசம்பர் முதல் 2015 பிப்ரவரிக் கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றத்தைப் புரிந்தததாக நம்பப்படுகிறது. லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் ரேமன் லிம் என்பவருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீதிமன்றம் 8 மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித் தது. தற்போது பிணையில் இருக்கும் லிம் மீதான குற்றங் கள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றத்திற்கும் அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம்.