கட்டட, கட்டுமான ஆணையத்தின் முத்தரப்புப் பணிக்குழு அறிமுகம்

கட்டட, கட்டுமான ஆணையத்தின் முத்தரப்புப் பணிக்குழு அறிமுகம்

1 mins read
b6e67a9a-3331-4ada-9f18-f7a8a4fabf8e
-

கட்டட, கட்டுமான ஆணையம் கட்டுமானத் துறையின் நடப்பு மற்றும் எதிர்கால ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய முத்தரப்புப் பணிக்குழு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நடப்பில் உள்ள உதவித் திட்டங்களை ஊக்கு விக்கும் வகையில் இந்தப் பணிக்குழு செயல்படும் என தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார். 'பெஸ்ட்' எனப்படும் முத்தரப்புப் பணிக்குழுவில் கட்டட, கட்டுமான ஆணையம், உயர்கல்வி நிலையங்கள், துறை சார்ந்த பங்குதாரர்கள் ஆகியோர் அடங்கு வர். உற்பத்தி, பாகங்கள் இணைப்புக்கான வடிவமைப்பு, ஒருங்கிணைந்த மின்னிலக்க விநியோகம், பசுமைக் கட்டடங்கள் ஆகிய துறைகளில் விரிவான பயிற்சிகளை வழங்க இக்குழு உதவிடும். "மாணவர்களுக்கான பாடத் திட்டம் கட்டுமானச் சுற்றுச்சூழலில் ஏற் படும் மாற்றங்களுக்கு ஏற்ப கூட் டாக இணைந்து பணிபுரியும் அனுபவத்தைப் பெறும் வகையில் மேம்படுத்தப்படும்," என்று திரு லீ தெரிவித்தார்.