நடப்பில் இருக்கும் பால் வகைகளோடு தற்சமயம் புதிய தரவகைப் பாலை தனது வாடிக்கையாளர்களுக்கு என்டியுசி ஃபேர்பிரைஸ் வெளியிட்டுள்ளது. இது நடப்பில் இருக்கும் ஒரு சில முன்னணிப் பால் வகைகளின் விலையில் பாதியாக விற்பனைக்கு உள்ளது. மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு 'ஃபேர்பிரைஸ் கோல்ட்' பாலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை அடிப்படை யாகக் கொண்ட அந்தப் பால் மூன்று பிரிவுகளில் கிடைக் கின்றது. ஆறு மாதத்திற்குள்ளான குழந்தைகளுக்கும், ஆறு மாதத் திற்கு மேல் ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கும், ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள்ளான குழந்தைகளுக்கும் வகைப்படுத்திப் பிரிக்கப்பட்டு விற்பனையில் இருக் கின்றன. 900 கிராம் கொண்ட ஒரு டின் 27 வெள்ளியிலிருந்து 29 வெள்ளி வரை விற்கப் படுகின்றது. "பெற்றோர்களின் தேவையை நிறைவுசெய்யும் வகையில் எங்களின் இன்னொரு முயற்சியாக இவை இருக்கின்றன" என என்டியுசி ஃபேர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங் தெரிவித்தார்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் குழந்தைகளுக்கான புதிய வகைப் பால் மாவு டின்களை அடுக்கி வைக்கும் ஊழியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

