மின்னணு தொழில்துறை வழிகாட்டித் திட்டம் தொடக்கம்

மின்னணு தொழில்துறை வழிகாட்டித் திட்டம் தொடக்கம்

1 mins read
fc87b7d4-632d-4416-b12d-694f02a4ce3f
-

மின்னணுத் தொழில்துறையின் உருமாற்ற வழிகாட்டித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2020ல் அந்தத் துறையில் நிபுணர் கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக் காக சுமார் 2,100 வேலைகள் உரு வாக்கப்படும். மின்னணுத் தொழில்துறை நிறுவனங்கள் உயர் மதிப்புமிக்க புதிய முதலீடுகளைக் கவர்வதற்கு உதவுவதும் அந்தத் தொழில்துறை யின் தயாரிப்பு மதிப்பை 2020 ஆம் ஆண்டில் $22.2 பில்லியனாக ஆக்குவதும் இந்த வழிகாட்டி திட்டத்தின் இதர இலக்குகள்.

மின்னணுத் தொழில்துறையின் மதிப்பு 2015ல் சுமார் $4.18 பில்லியன் என்று ஸ்பிரிங் சிங்கப் பூர் அமைப்பு தெரிவிக்கிறது. மின்னணுத் தொழில்துறை சிங்கப்பூர் பொருளியலில் முக்கிய வளர்ச்சித் துறையாக இருந்து வந்துள்ளது என்றும் அந்தத் துறை தொடர்ந்து முக்கிய துறை யாக இருந்து வரும் என்றும் வர்த் தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் அறிவித்தார். இந்தத் துறை 2016ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக இருந்தது. உற்பத்தித்துறையில் $90 பில் லியன் மதிப்புடன் இது திகழ்ந்தது. சுமார் 70,000 பேருக்கு இந்தத் துறை வேலை கொடுத்தது.

வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன், மின்னணுத் தொழில்துறை உருமாற்ற வழிகாட்டித் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார். அந்நிகழ்ச்சியில் JTC nanoSpace @ Tampines கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்