சிங்கப்பூர் துறைமுக ஆணையத் தின் கெப்பல் முனையத்தில் புதன் கிழமை காலை 33 வயது ஆடவர் விபத்தில் சிக்கி மாண்டார். பாரந்தூக்கியின் மேல்தளத்தில் கேபல் டிரம்மில் அவர் சிக்கியிருந் ததாக சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆடவரின் உடல், குடிமைத் தற்காப்புப் படை மற்றும் துறைமுக ஆணையத்தின் அவசர குழுக் களால் பாரந்தூக்கியிலிருந்து கீழே இறக்கப்பட்டது. சம்பவம் பற்றிய விசாரணை தொடர்வதாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவர் ஒரு சிங்கப்பூரர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வேண்டிய உதவி யைச் செய்து வருவதாகவும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் ஆணையம் குறிப் பிட்டுள்ளது.
பாரந்தூக்கியில் சிக்கி ஆடவர் மரணம்
1 mins read

