வெளிநாட்டு கார்களின் சந்தை மதிப்புப் பற்றி தவறான தகவல் அளித்ததற்காக கார் இறக்குமதியாளர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றம் 8 வார சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அத்துடன் கார்களின் சரியான சந்தை மதிப்புக்குள்ள வரியாக $1.7 மில்லியனைக் கட்டும்படி உத்தரவிட்டுள்ளது. 'டெங் ஆட்டோஸ்போர்ட்ஸ் டிரேடிங்' என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் மலேசியரான டேங்க் லுவான் இயூ, 42, என்ற அந்த ஆடவருக்கு கலால் மற்றும் பொருட் சேவை வரி கட்டத் தவறியதற்காக $1.97 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் மீது சுங்க விதி தொடர்பாக 104 குற்றச்சாட்டுகளும் கலால் மற்றும் பொருள் சேவை வரி ஏமாற்றியது தொடர்பாக 81 குற்றச்சாட்டுகளும் சாலைப் போக்குவரத்து விதிகளின் கீழ் 244 குற்றச் சாட்டுகளும் சாட்டப்பட்டன.
வரி ஏமாற்றம்: கார் இறக்குமதியாளருக்கு 8 வார சிறைத் தண்டனை
1 mins read

