சக வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் வந்த தேசிய சேவையாளர்கள்

சக வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் வந்த தேசிய சேவையாளர்கள்

1 mins read
baa45f79-9100-4d0b-93ac-54f6a462bd8c
-

தேசிய சேவை பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்று பயிற்சியின்போது மரணமடைந்த தேசிய சேவையாளர் கேவின் சான் ஹியாங் செங்கின் படைப்பிரிவினர் சிங்கப்பூர் திரும்பியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் 'எக்சர்சைஸ் வல்லபி' நிறைவு பெற்றுவிட்டதாகவும் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களையும் சிங்கப்பூருக்கு வர வழைக் கும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறியப்படுவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை விபத் தில் மாண்ட கேவினின் உடல், செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் ஆயுதப்படை விமானம் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட் டது. மறைந்த மூன்றாவது சார் ஜெண்ட் கேவின் சானுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். வரும் சனிக்கிழமை அவரது உடல் மண் டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்படும். தனது குடும்பம் துயரத்தி லிருந்து மீண்டு வருவதாகவும் விபத்தின்போது உடன் இருந்த மற்றவர்களையும் நல்லதையே நினைத்து நடந்தவற்றுக்கு வருந் தாமல் வாழ்க்கையைத் தொடரு மாறும் கேவினின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

பாசிர் ரிஸ்ஸில் உள்ள மறைந்த கேவின் சானின் வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்