அதிபர் ஹலிமாவின் முந்தைய சிந்தனை; தொண்டு நிறுவனத்தின் இன்றைய திட்டம்

அதிபர் ஹலிமாவின் முந்தைய சிந்தனை; தொண்டு நிறுவனத்தின் இன்றைய திட்டம்

1 mins read
866f34ce-8b38-4b7c-a1a5-9c31e900d8d0
-

முதியோர் பராமரிப்பு நிலையத்தை உடல்குறையுள்ளவர்களும் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு நிலையத்தைத் திறந்து வைக்கும் திட்டத்தை நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் பார்வையிட்டார். தியோங் பாருவில் அமைந் துள்ள தை ஹுவா குவான் (டிஹெச்கெ) இண்டஸ் மோரல் கேர் மூத்தோர் நடவடிக்கை மையத்திற்கு நேற்று சென்றார் அதிபர் ஹலிமா. இந்தத் திட்டம் முதன் முதலில் 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது, அப்போது துணை அமைச்சராக இருந்த திருவாட்டி ஹலிமாவின் சிந்தனை என்றும் அவரின் ஆலோசனையின் பேரில் அப்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் டிஹெச்கெ அறநிறுவன தலைவர் லீ கிம் சியாங் தெரிவித்தார். வீட்டில் முடங்கிக்கிடக்காமல் சமூகப் பொழுதுபோக்கு நிகழ்வு களில் அவர்கள் கலந்துகொள் வதற்கு இந்தத் திட்டம் வழிவகுக் கிறது. இலவசமாக வழங்கப்படும் இந்தத் திட்டம், வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு சில மணி நேரங்களுக்குச் செயல்படும். நேற்று தை ஹுவா குவான் (டிஹெச்கெ) இண்டஸ் மோரல் கேர் மூத்தோர் நடவடிக்கை மையத்தை பார்வையிட்டார் அதிபர் ஹலிமா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்