நல்ல சமுதாய பழக்கவழக்கங்களை வளர்க்க உதவும் சித்திரப் புத்தகம்

நல்ல சமுதாய பழக்கவழக்கங்களை வளர்க்க உதவும் சித்திரப் புத்தகம்

1 mins read

துவைத்த துணிகளை நன்கு பிழிந்தபின் உலர்த்தப் போடுவது, ஏடிஎம் இயந்திரத்தை ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருந்தால் சற்று தள்ளி நிற்பது போன்ற சமுதாயப் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் வகையில் மக்கள் கழகம் ஒரு சித்திரப் புத்தகத்தை (காமிக்ஸ்) நாளை வெளியிடவிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய, பரிவுமிக்க சமுதாயத்தை அமைக்க உதவுவதே இந்த வழிகாட்டிப் புத்தகத்தின் நோக்கம். தமது தொகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு சமூக நிகழ்வின்போது போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் குறிப்பிட்ட ஏற்றுக்கொள்ளுதல், துடிப்பான குடிமக்கள், பரிவு, நேர்மை, நட்புணர்வு, வெளிப்படைத்தன்மை, மரியாதை, சகிப்புத்தன்மை ஆகிய எட்டு விரும்பத்தக்க நற்பண்புகளை ஒட்டி இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.